மட்டக்களப்பு "லைற்ஹவுஸ்" விளையாட்டுக்கழகத்தின் 43வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி - Photo

(சதீஸ்)
மட்டக்களப்பு "லைற்ஹவுஸ்" விளையாட்டுக் கழகத்தின் 43வது அண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட நொக்கவுட் முறையிலான அணிக்கி ஏழுபேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைற்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்றயதினம் காலை ஆரம்பமகி இரண்டு நாள் கொண்ட நிகழ்வாக இன்று 25ம் திகதி மாலை நிறைவடைந்தது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் மற்றும் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்.ரி.பாறுக் அவர்களும்  அழைப்பு அதிதிகளாக பாலமீன்மடு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சத்துரதம்மசேனா, கிராம உத்தியோகத்தர் ஏ.நேசதுரை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விளையாட்டு நிகழ்வில் இரண்டு நாட்களும் மொத்தமாக 34 கழகங்கள் பங்குபற்றியது. இதில்  மட்டக்களப்பு சீலாமுனை "யங்ஸ்டார்" விளையாட்டுக் கழக அணியினர் முதலாம் இடத்தினைப் பெற்று சம்பியனாக தெரிவாகினர்.

இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு "மைக்கள்மென்" விளையாட்டுக் கழகமும், மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு "கோள்ட்பிஷ்" விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டது.

இதில் சிறப்பம்சம் யாதெனில், "யங்ஸ்டார்" விளையாட்டுக் கழகத்தினர் கடந்த ஆண்ட்களில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் 1ம் இடத்தினைப் பெற்று சம்பியனாக திகழ்கின்றது.
இதன்போது வெற்றிபெற்ற முதல் மூன்று கழகங்களுக்கும் பணப்பரிசுகளும் கேடயங்களும் பரிசாக லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது.

ஏனைய நான்காம்,ஐந்தாம் இடங்களைப் பெற்ற கழகத்திற்கு கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு அவரின் சிறந்த சேவைக்காகவும் அவரை கௌரவிக்கும் முகமாகவும் நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய மாநகர ஆணையாளர், 'விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டை மட்டும் இலக்காக கொண்டு செயற்படக்கூடாது. ஒற்றுமையுடன் சமூகசேவைகளிலும் அதிகம் ஈடுபடவேன்டும். இந்த லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகம் பல சமூகசேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக நான் அறிகின்றேன்'. எனும் விடயத்தினையும் தெரிவித்தார்.