மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது

விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஒருவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.