மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவையொட்டிய கிழக்கு மாகாணம் தழுவிய வாகன பவணி வியாழக்கிழமை (29) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் உள்நாட்டு,வெளிநாட்டு பழைய மாணவர்களின் கிளைகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
பாடசாலையின் முன்றிலில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு.வாகன ஊர்தியானது காந்தி சதுக்கத்துக்கு சென்று அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஸ்த்தாபகர் அருட்தந்தை வில்லியம் ஓல்டின் உருவச்சிலைக்கு பாடசாலையின் தற்போதைய அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள் மலர் மாலை அணிவித்தனர்.
கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் பாடசாலையின் பழைய மாணவர்களான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன், அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உட்பட சமய பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள், கல்வியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது காந்தி பூங்காவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வாகன ஊர்தியில் அதிதிகள் கையொப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது.
வாகன பவணி மட்டக்களப்பு-திருமலை வீதியூடாக திருகோணமலைக்கு சென்று நாளை வெள்ளிக்கிழமை கல்முனை நோக்கிச்சென்று அங்கிருந்து சனிக்கிழமை பொத்துவில் வரைக்கும் செல்லவுள்ளது.
இந்த நிகழ்வினை தொடர்ந்து 200வது ஆண்டினை குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன












