மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கான புதிய மாணவர்களை அனுமதித்தல்

 (ரவி )
2014ம் கல்வியாண்டிற்கான  அடுத்த ஆறுமாத கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
கொம்பியூட்டர் காட்வெயர், மோட்டார் சைக்கிள் மெக்கானிக்,  அலுமினியம் புனைபவர், ஆகிய கற்கை நெறிகள் யூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.  இக் கற்கை நெறிகள் அனைத்தும் NVQ  மட்டம் 4 கொண்டுள்ளது.
இக் கற்கை நெறிகளை பயிலும் மாணவர்கள் 17 வயதினைக் கொண்டுள்ளதுடன,; கல்வித்தகமை வகுப்பு 9னை பூர்த்தி செய்தவர்கள் தொடக்கம் க.பொ.த (சாதாரணம்) இரண்டு அமர்வுகளில் கணிதம், விஞ்ஞானம் உட்பட ஆறு பாடங்களில் சித்திடைந்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என அதிபர் T. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இக்கற்கை நெறிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன்,மாதாந்தம் ரூபா 1000 கொடுப்பனவும், அரை மானியத்துடனான பருவகால சீட்டும் வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்.