ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையில் விளையாட்டுப் போட்டியும் மாணவர் சந்தையும்

(சதீஸ் )
மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியும் செலான் மாணவர் சந்தை நிகழ்வும் மட்டக்களப்பு செலான் வங்கி கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் நேற்று 11ம் திகதி இடம்பெற்றது.

இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் செலான் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் பிரியந்தன், செலான் வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் திருமதி இ.பத்மஸ்ரீ உட்பட ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் செலான் வங்கி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 கடந்த வலயமட்ட ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான போட்டியில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட இப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி பரராஜசிங்கம் ரெஜிதா மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் (தனி) கராத்தே போட்டியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட மாணவியான இன்பராசா கிஷானி ஆகியோருக்கு பிரதம அதிதி பிரசன்னா இந்திரகுமார் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இன்றையதினம் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சிறுவர் சந்தையும் இடம்பெற்றது.

 இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளாலும், அதிபர், ஆசிரியார்கள் மற்றும் உத்தியோகத்தர்களால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.