'சமுர்த்தி தொழில் கேவலமானது' செய்தி தொடர்பான செய்திக்கு மட்டு-மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன தலைவர் ரி.எல்.ஜவ்பர்கான் ;விடுக்கும் அறிக்கை
15-05-2014 இன்றைய சில இணைய ஊடகங்களில்; வெளியான சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தொழில் கேவலமானது செய்தி தொடர்பாக முதலில் எனது வருத்தத்தை வெளிப்படுத்துவதுடன்,இச் செய்தி தொடர்பில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி முகாமையாளர்கள்,உதவி ஆணையாளர் உட்பட சமுர்த்தி அலுவலர்கள் வருத்தத்திற்குள்ளாகியிருந்தால் அதற்காக மேற்குறிப்பிட்ட தரப்பினரிடத்திலும் மனம் வருந்துவதுடன் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன்.
மேற்படி எனது பேச்சானது ஓரு விபத்தாக நிகழ்ந்ததே தவிர வேண்டுமென்றோ,திட்டமிட்டோ நிகழ்ந்ததல்ல சமுர்த்தி அதிகாரிகளை தாக்கும் எண்ணமோ இதற்கூடாக எனக்கில்லை என்பதையும் தெரிவிக்கவிரும்புகிறேன்.
மட்டக்களப்பு மாவட்ட முழு நேர ஊடகவியலாளர் சங்க புனரமைப்பு கூட்டத்தில் நான் உரையாற்றி முடிந்ததன் பிற்பாடு –ஊடகவியலாளர்; ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் குழுக் கலந்துரையாடலில் தெரிவித்த கருத்தையே ஒரு ஊடகவியலாளர் என்மீது கொண்ட காழ்ப்புணர்வு காரணமாக குறித்த தகவலை செய்தியாக்கிருக்கிறாரே தவிர இதில் திட்டமிட்ட செயற்பாடு எதுவுமில்லை என்பதை தெளிவாக்க விரும்புகிறேன்.
நீண்டகாலமாக ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளநான் இதுவரைகாலமும் எந்தவிதமான விமர்சனங்களுக்கும் உள்ளாகாத நிலையில் இவ்வாறானதொரு விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றதையிட்டு மீண்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.