ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்முனை மாநகர் அருள் வளர் ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலய நவகுண்டபக் ஷ ஜீர்ணோத்தாரண ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் விமர்சையாக எதிர்வரும் திங்கட் கிழமை (02.06.2014) நடை பெறவுள்ளது. 29.05.2014 திகதி வியாழக் கிழமை ஆலய கிரியைகள் கர்மாரம்பமாகி 31.05.2014, 01.06.2014 ஆகிய இரு தினங்களும் எண்ணெய்க்காப்பு நிகழ்வு இடம் பெற்று 02.06.2014 மகா கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது.
ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகளாக வைகாசித் திங்கள் 15ஆம் நாள் (29.05.2014) வியாழக்கிழமை அதிகாலை ஆச்சார்ய வர்ணத்துடன் ஆரம்பமாகி மகா பிரதிஷ்டா சங்கல்பம், விநாயக அனுக்கரை, பிராமண அனுக்கரை, அஸ்ர தேவ பூஜை கோ பூஜை, கோவாசம்,லக்ஷ்மி குபேர பூஜை, திரவ்விய விபாகம், முகூர்த்த பத்திரிகா படனம்,பேரிடாதனம், கணபதி ஹோமம், கணபதி உபநிஷத் பாராயணம், விநாயகர் அகவல் ஓதல், வாஸ்த்து சாந்தி இடம் பெற்று மாலை விநாயக வழிபாடு, கிராம சாந்தி அஷ்டபலி, பிரவேச பலி, திக்பாலதேவ தான,ராக, நிர்த தேவார உபகாரங்கள், சாந்தி ஹோமம், திசாஹோமம்,ரக்ேஷாக்கன ஹோமம், சம்கிதா ஹோமம், மூர்த்தி ஹோமம் ஆகிய வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
அதேபோன்று தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் காலை மாலை தொடர் கிரியைகள் இடம் பெற்று யாக பூஜை, அக்கினி வழிபாட்டுடன் பன்னிரு திருமுறை ஓதல் இடம்பெற்று வைகாசித் திங்கள் 19ஆம் நாள் (02.06.2014) திங்கட்கிழமை சுபாசுப முகூர்த்தத்தில் விநாயகப் பெருமானுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் இடம்பெற்று தசதர்ஷனம், திருக்கதவு திறத்தல், சிவாச்சாய சம்பாவணை, மகாசீர்வாதம், மகாபிஷேகம், அகண்ட தீபாராதனை என்பன இடம்பெறும்.
கும்பாபிசேக குருமார்களாக பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார் பிரதிஷ்டா சிரோன்மணி, கிரியாகால வித்தகர்,கிரியாமணி தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான பிரம குரு பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பூசகர்களால் இந்த கும்பாபிஷேக பெரு விழா நடத்தி வைக்கப்படவுள்ளது.
ஆலய கட்டட நிர்மாணம் மட்டக்களப்பு கல்லடி ஆச்சார்ய திலகம் ஞா.ஆனந்தராசா ஆச்சாரியரினாலும், சிற்ப வேலைகள் தமிழ் நாடு பிரம்ம ஸ்ரீ உ.கருப்பையா சிற்பாச்சாரியினாலும் வர்ணப் பூச்சு ஆரையம்பதி தெய்வீக கலைவாணன் துரைசிங்கம் ஜெகதீஸன் குழுவினராலும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 45 நாட்கள் மணடலாபிஷேகமும் இறுதி நாளான 16.07.2014 அன்று 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகமும் இடம்பெற்று கல்முனை கடற்கரை கண்ணகியம்மன் ஆலயத்திலிருந்து ஸ்ரீ தரவைச்சித்தி ஆலயம் வரை பால் குட பவனியும் இடம் பெற்று அன்றையதினம் வல்லிபுரம் சிறிஸ்கந்தராஜா வின் அனுசரணையில் அன்னதானமும் இடம் பெறவுள்ளது.

.jpg)
.jpg)
.jpg)