சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு

(தில்லை)
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு  கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வானது தாதியர் உத்தியோகத்தரும் தாதியர் நலன்புரிச்சங்க தலைவருமான கே.ஜெகநாதன் தலைமையில் வெளிநோயாளர் பிரிவில் இன்று காலையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் என்.ரமேஸ் ஆகியோரும் கழந்துகொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் பணிபுரியும் சகல உத்தியோகஸ்த்தர்களும் இரத்ததான நிகழ்வில் கழந்து கொண்டதுடன் இன்று மாத்திரம் ஆண்கள், பெண்கள் என சுமார் முப்பதற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கழந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இதன் தொடர்ச்சி இன்னும் இரண்டு தினங்;களுக்கு இவ்வைத்தியசாலையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தாதியர் தினமானது எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதாரவைத்திய சாலையிலும் பாடசாலைகளிலும் விளிப்புணர்வு கருத்தரங்குகளும் தாதியர் சேவையின் மகத்துவம் பற்றியும்  எதிர்வரும் நாட்களில் சமூகமட்டத்தில்; நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.