(படுவான் பாலகன்) வெசாக் பண்டிகையை சிறப்பித்து இன்றைய தினம் (14)புதன்கிழமை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவினரால் தாய் தந்தைகளை இழந்த, ஆதரவற்ற அரசடித்தீவு சக்தி மகளீர் இல்ல மாணவர்களுக்கு உடைகள் மற்றும் இன்றைய தினத்திற்கான மதிய மற்றும் இரவு நேர சமைத்த உணவும் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. சாணக்க டிசில்வா , உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. G.K.D.S டில்றுக்க
மற்றும் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.















