கிழக்கு மாகாண சபையினால் கொடுக்கப்படும் நியமனங்களில் அநீதி- மாகாண சபை உறுப்பினர் ஜனா


(மா.சசி)
கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாண சபையினால் கொடுக்கப்படும் நியமனங்கள் மிகவும் அநீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) மாகாண சபையில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் கி. துரைராசசிங்கம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட இருக்கின்ற சாரதிகளுக்கான நியமனம் முறையற்றது என கொண்டு வரப்பட்ட தனிநபர் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் அங்கு உரையாற்றுகையில்,
கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாண சபையினால் கொடுக்கப்படும் நியமனங்கள் மிகவும் அநீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் இனத்தை முற்றாக புறக்கணித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த சாரதிகள் நியமனத்திற்காக கிழக்கு மாகாணம் முழவதிலுமே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. போட்டிப் பரீட்சை நடைபெற்று முடிந்ததின் பின் அம்பாறைஇ திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இருந்து ஒரு தமிழர் கூட நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை. மட்டக்களப்பில் இருந்து ஒற்றை எண்ணிக்கையிலேயே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனார். அம்பாறைஇ திருகோணமலையில் இருந்து தமிழர்களை நியமிப்பது இல்லை என்றால் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்க கூடாது. அவர்களின் பணத்தையும் செலவழித்து போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்து நேரத்தையும் வீணடித்து பரீட்சையில் பங்கு பற்றியதின் பின் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம். திட்டமிட்டு அந்த மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நாடடிலே 70 களில் அரசாங்கம் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியதின் பின்புதான் இளைஞர்கள் கூடுதலாக விடுதலையை பற்றி சிந்தித்தார்கள். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் இந்த நாட்டில் நடந்ததையும்இஅதனூடாக இழந்தவைகளையும் யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள். அதே போல் இந்த ஜனநாயக நாட்டில் எமது பிரதேசத்தில் இப்படி ஒரு இனத்தை ஒதுக்கி நடைபெறும் இந்த வேலைகள் மீண்டும் ஒரு முறை எம்மால் மாத்திரமல்ல எமது எதிர்கால சந்ததியினராலும் இந்த நாட்டில் ஏற்படக் கூடாது.

விகிதாசாரம் என்று கூறுகின்றீர்களே அது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் தான் பொருந்துமா. மத்தியில் விகிதாசாரம் பார்க்கப்படுகின்றதா. இந்த நாட்டில் இருக்கும் SLAS உத்தியோகஸ்தர்களில் எத்தனை வீதம் தமிழர்கள் இருக்கின்றார்கள். அமைச்சு அதிகாரிகளில் எத்தனை வீதம் தமிழர்கள் இருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல இந்த ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்த நாட்டின் ஆயுதப்படையிலோ காவல் படையிலோ எத்தனை வீதம் சிறுபான்மையினர் இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஆளுனர் தான் இந்த விகிதாசாரத்தை பார்க்கின்றார். இவர் எப்படிப்பட்டவர் என்பதை பட்டிப்பளை பிரதேச சபை கட்டிட திறப்பு விழாவில் பேசும் போது எமது முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் பேசும் போது கூறினார். இந்த நாட்டின் முக்கியமானவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் எமது ஆளுனரும் அந்தப் பட்டியலில் இருப்பார் என்று அந்த முக்கியமானவர் என்றால் என்ன என்பது பத்திரிகை பார்க்கின்ற உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆதை புட்டு வைக்க வேண்டிய தேவை இல்லை என நினைக்கின்றேன். நியமனங்களின் விகிதாசாரம் பார்க்கின்றோம் என கூறிவிட்டு பின்பு சமப்படுத்தல் என்று கூறுகின்றீர்கள். கிழக்கு மாகாண சபை தனியாக உருவாக்கப்படும் முன்பு இங்கு தமிழர்களை மட்டும் தான் தொழிலுக்கு அமர்த்தினார்கள். தமிழர்களின் கையில் தான் ஆட்சி அதிகாரம் இருந்ததாகவும் கூறுகின்றீர்கள். வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையாக இந்த நாட்டில் ஒரு வருடத்துக்கும் குறைவாகவே அந்த சபை நடைப்பெற்றது. 90 க்கு பின்னர் 2008 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கு தனியான தேர்தல் நடைபெற்றது ஆட்சி நடாத்தும் வரை ஆளுனரின் கைகளிலேயே ஆட்சி இருந்தது. தற்போதய ஆளுனரும் அந்த கால கட்டத்தில் இருந்தார். அப்போதெல்லாம் தெரியாத சமப்படுத்தலை இப்போ தான் தெரிகின்றதா. 1989,1990 களில் வழங்கப்பட்ட நியமனங்களை பெற்றவர்கள் அப்போது 30 வயதை எட்டியிருந்தால் தற்போது ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விடுவார்கள். நீங்கள் கூறுவதை போல் 90 களில் தமிழர்கள் மட்டும் தான் நியமிக்கப்பட்டிருந்து தற்போது சமநிலைப்படுத்தினால் இன்னும் ஒன்று இரண்டு வருடங்களில் அவர்கள் ஓய்வு பெற்றதின் பின்பு மீண்டும் ஒருமுறை சமப்படுத்தல் செய்யும் போது தமிழர்களை மாத்திரம் தானே நியமனம் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டல் தமிழர்களின் நிலை என்ன என்பதை ஏன் சிந்திக்க மாட்டேன் என்கின்றீர்கள். எனவே விகிதாசாரம் பார்ப்பதாக இருந்தால் அதற்கேற்றால் போது தற்போது கிழக்கு மாகாண மட்டத்திலோ அல்லாது மாவட்ட மட்டத்திலோ இருக்கும் விகிதாசாரத்துக்கு ஏற்றால் போல் நியமனங்களை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
 
இந்த சபையிலே அமீர் அலி உரையாற்றியதற்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பாட்டிலும் இருக்கின்றேன். அவர்கள் உரையாற்றும் போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரை ஒரு முஸ்லிமாக நியமித்த போது அவர் ஒரு முஸ்லிம் என்றதற்காக நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டித்ததாக கூறினார். நாங்கள் தனிப்பட்ட ரீதியாக அவரை கண்டிக்கவில்லை அவரது திறமை எமக்கு தெரியும். ஆனால் நாங்கள் கூறியதெல்லாம் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் காணிப்பிரச்சனைகளாக இருந்தாலும் சரி இனங்களுக்கிடையில் ஒரு நம்பகத் தன்மை இல்லாமல் இருக்கின்றது. இந்த நேரத்தில் மத்தி அரசில் உள்ளூராட்சிக்கு பொறுப்பாக கிழக்கைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அமைச்சராக இருக்கின்றார். அவரது பிரத்தியோகச் செயலாளர் ஒரு முஸ்லிமாக இருக்கின்றார். அதேபோல் கிழக்கு மாகாண சபையில் உள்ளூராட்சி அமைச்சராக ஒரு முஸ்லிம் இருக்கின்றார். அவரது செயலர் ஒரு முஸ்லிமாக இருக்கின்றார். இந்த நிலையில் இனங்களுக்கிடையில் ஓர் நல்லுறவு வரும் வரை வேறொரு இனத்தை சார்ந்தவரை உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்குமாறு தான் கோரினோம். இதை அடுத்து அமீர் அலி கூறியது போன்று ஓர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் கூறவில்லை. அப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடக்கவும் மாட்டார்கள்.
அது மாத்திரமல் அவர் உரையாற்றும் போது தாங்கள் தங்களது இனத்துக்காக குரல் கொடுக்கும் போது கூட்டமைப்பினர் வெளியில் செல்வதும் கூச்சலிடுவதும் தான் வேலை என்றார்.

நான் அவருக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். இந்த நாட்டில் 2009ம் ஆண்டுக்கு பின்பு எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது. எத்தனை வியாபார ஸ்தலங்கள் உடைக்கப்பட்டது. எத்தனை சிறுபான்மையினர் தாக்கப்பட்டார்கள் கொல்லப்பட்டாகள். எங்கு எங்கு சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றார்களோ எல்லாவற்றிற்கும் குரல் கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் தான். புள்ளிவாசல்கள் தாக்கப்படும் போது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்துக்குள் குரல் கொடுத்துக் கோண்டிருக்கும் போது அதை இடைமறித்தது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அப்போது நீங்களும் உங்கள் இனத்துக்காக பேசமாட்ரீர்கள். ஏன் எங்களையும் உங்கள் இனத்துக்காக பேசவிடுகின்றீர்கள் இல்லை. என கேட்டவர் சம்பந்தன் ஐயா அது மாத்திரம் அல்ல ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை ஆணையாளர்  நவநீதம்பிள்ளை அம்மையார் இந்த நாட்டிற்கு வருகை தந்த போது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவருக்கு புள்ளிவிபரங்களுடன் எடுத்துக் கூறியவர் எமது தலைவர் சம்பந்தன் ஐயா தான். அப்போது நவநீதம்பிள்ளை அம்மையார் மிகவும் நன்றி கூறினாhராம் சம்பந்தன் ஐயாவிற்கு ஏனென்றால் இந்த நாட்டில் நீங்கள் உங்கள் இனத்திற்காக மட்டுமல்லாது முஸ்லிம் இனத்திற்காகவும் பேசுகின்றீர்களே என்று. அந்த வழியில் வந்த நாங்கள் சிறுபான்மை இனத்திற்கு எங்கு அநீதி நடந்தாலும் குரல் கோடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றேன் எனத் தெரிவித்து அவரது உரையை நிறைவு செய்துள்ளார்.