களைகட்டிய கல்லாறு பட்டதாரி மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

( ரவிப்ரியா )
பிரதேச கல்வி அபிவிருத்தியில் சிறந்த பங்காளியாகச் செயற்பட்டு வரும் கல்லாறு பட்டதாரி மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கலாசார மண்டபத்தில்
அண்மையில் எஸ்.கமல்ராஜ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர்; ரங்கநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்;. அதி விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், மட் கல்வியற் கல்லூரி தலைவர் எஸ்.இராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா,மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ம.ருதேசன், தென் கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் எஸ்.வரதராஜன், களுவாஞசிக்கடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.எஸ்.பிரியந்த, ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக பாடசாலையின் அதிபர்களும், _ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம், 10 சிவசுப்பிரமணியர் ஆலய தலைவர் எஸ்.பேரின்பராஜா, புனித அருளானந்தர் ஈலய பங்குத் தந்தை ஜி.அம்புறோஸ், கிராம உத்தியோகத்தர் எஸ்.ஞானசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டு  பாண்ட வாத்தியம் சகிதம் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடனும், மௌன இறைவணக்கத்துடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நடன நிகழ்வுகளின் சங்கமமாக, பரிசளிப்பும் இடம் பெற்றது.

நிகழ்வின் தரம் தாங்கள் பட்டதாரிகள் தான் என்பதை நிரூபித்தது. அத்துடன் ஒன்றியம் வடிவமைத்த நடனங்களும், பாடசாலைகளின் நடனங்களும் கலை ரசிகர்களின் கண்களைக் கவரத் தவறவில்லை. குறிப்பாக ஒன்றிய அங்கத்தவர் திருமதி பிரசன்னியாவின் நடனம் பரத முத்திரைகளின் நளினமாக அனைவரையும் பரவசப்படுத்தியது. நாம் கல்வியில் மட்டுமல்ல எமது பாரம்பரிய கலைகளிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை கைதட்டல்கள் மூலம் கண்டு கொள்ளவே செய்தனர். இது ஒரு புதிய திருப்பம். இது இதே பாணியில் தொடரப்பட வேண்டும்.

அத்துடன் எமது பிரதேச செயலக பிரிவிற்கு ஐ அலைவரிசையின் 'ரலன்ர்' நகழ்ச்சியின் மூலம் தன் திறமையை நிரூபித்த எருவிலைச் சேர்ந்த தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவனான தியாகராசா.யாதோவிற்கு அறிவிப்பாளருக்கான  சிறந்ததொரு அரங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து, அவரை அறிவிப்பாளராக அறிமுகப்படுத்தியமையானது முன்மாதரியான செயற்பாடாகும். அவருக்கும் பெருமை. நிகழ்ச்சித் தொகுப்பும் அருமை. அதனால் நிகழ்வும் முழுமை. 'வற்றி நியூஸ்' வாழ்த்தும் உங்களுக்கு உரிமை.

பரிசளிப்பில் 5ந்தர புலமைப்பரில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களும், க.பொ.த. சாதாரணப் பரிPட்சையில் உயர் பெறுபேறு பெற்றவர்களும், பலகலைக்கழக அனுமதி கிடைக்கப் பெற்றவர்களும் உள்வாங்கப்பட்டமையானது மாணவர்களுக்கு உற்சாகமளிக்கும் நல்ல ஊக்க மருந்தாகும்.

அதிதிகள் கருத்துக்கள்.

அதிபர் நல்லதம்பி:-
சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் இந் நிகழ்விற்கு சித்தியடையாத மாணவர்களும் அழைக்கப்பட்டு அவர்களையும் இந் நிகழ்வில் பங்கு கொள்ளச் செய்வது பயனுள்ளதாக அமையும்.

கோட்டக் கல்விப் பணிப்பாளர்:-
இவர்கள் 5ந்தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சதாரணம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பக்களை நடாத்துவது காலத்தின் தேவை உணர்ந்து செய்யும் மிகவும் அர்ப்பணிப்பான சேவையாகும்.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர்:-
இந்த ஒன்றியத்தின் சேவைகளை நன்கு நானறிவேன். இவர்களுக்கு கட்டட வசதி இல்லை என்பதை என் கவனத்திற் கொண்டுள்ளேன். வெகுவிரைவில் இவர்களுக்கான கட்டட வசதியை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ செய்து கொடுப்பதற்கு நான்; நடவடிக்கை எடுப்பேன். இவர்களின் முயற்சிகள் தொடர வேண்டும்.

மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்:-
கல்விப் பணி செய்பவர்கள் பாக்கியவான்கள். அந்த வகையில் இவர்களின் பிரதேச கல்வி மேம்பாட்டிற்கான பணி கண்டு தலை வணங்குகின்றேன். எனது நண்பர்கள் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் இவ் ஒன்றியத்தின் செயற்பாடுகள் பற்றி என்னிடம் தெரிவிக்கத் தவறுவதில்லை. சமூக மட்டத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள இவ் அமைப்பின் செயற்பாடுகள் மேலும் விரிவடைய வாழ்த்துகின்றேன்.

பார்வையாளர்கள் கருத்து:-
சிறந்த நிகழ்வு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிதிகள் பட்டியல் நீளத்தைக் குறைத்து, கலை நிகழ்வகளை மட்டுப்படுத்தி, இரண்டு மணித்தியாலயத்திற்கு மேற்படாமல் நிகழ்வை ஒழுங்கமைத்தால் இன்னும் சிறப்பாக அமையும்.