தாந்தாமலை கச்சக்கொடி கிராமிய மீன்பிடி அபிவிருத்தி சங்க மீன் அறுவடை விழா

(படுவான் பாலகன்) தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் மற்றும் மீன்பிடி சங்கத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் பிரதேச தேசிய நீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபை(NAQDA) மற்றும் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட வேள்ட்விஸன் லங்கா நிறுவனம் ஆகியன இணைந்து கடந்த ஆண்டு கச்சக்கொடி, தாந்தாமலை ஆகிய மீன்பிடி சங்கங்களுக்கு அவர்களது குளங்களில் மீன் குஞ்சுகளை இட்டு பராமரிப்பதற்காக 120000 மீன் குஞ்சுகளை  வேள்ட்விஸன் நிறுவனம் வழங்கி வைத்தது.

மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டு ஒருவருட ஆண்டு விழா இன்று(27) செவ்வாய்க்கிழமை தாந்தாமலையில் தாந்தாமலை மீன்பிடி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய வேலைத்திட்ட முகாமையாளர் திரு.G.J.அனுராஜ் மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இன்று அக்கிராம குளங்களில் 250000க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் காணப்படுவதுடன் அதனை அறுவடை செய்யும் நிகழ்வும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அறுவடை தொடங்கி இதுவரை 4500கிலோகிராம் அளவில் மீன் அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் 1கிலோ கிராம் மீன் 150ரூபாய் வீதம் விற்பனை செய்வதாகவும் அக்கிராம மீனவ சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

இதன் மூலம் அக்கிராமங்களில் உள்ள 110 குடும்பங்கள் பயனடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.