கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மே தினக் கூட்டம்! (Photo & video)

( SATHEESH & THUSANTHAN)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் ஏற்பாடுசெய்த சர்வதேச மேதின நிகழ்வுகள் நேற்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மிக பிரமாண்டமானமுறையில் இடம்பெற்றது.

தழிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நகர அலுவலகத்திலிருந்து மேற்படி மேதின பேரணி ஆரம்பமாகி மண்முனை பாலத்தினுடாக கொக்கட்டிச்சோலை - மகிழடித்தீவுவரை சென்று அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது மிக பிரமாண்டமான வாகனப்பேரணியுடன் மக்களும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின்போது,  கோட்டக்கல்வி பணிப்பாளர் பாலச்சந்திரனால் சிறப்புரையினை வழங்கினார். தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் கொள்கைபரப்புச் செயலாளர் அசாத் மௌலானா ஆகியோரால் உரைகள் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து மேதின விசேட உரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இறுதியில் விவசாயிகள், உழைப்பாளிகள் மற்றும் ஆலய குருமார் பொன்றோர் தலைவர்.சி.சந்திரகாந்தனால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.