(படுவான் பாலகன்) கடந்த 17ம் 18ம் திகதிகளில் கிழக்கு மாகாண மட்ட குழு விளையாட்டுக்கள் அம்பாறை D.S.சேனநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் 19வயது பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு மட்/மகாஜன கல்லூரி அணியும் அம்பிளாந்துறை கலை மகள் வித்தியாலய அணியும் தெரிவாகி இதில் மட்/அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அணி முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு 15வயதின் கீழ் ஆண்கள் அணி கரப்பந்தாட்ட போட்டியில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதனை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர் திரு.கு.நமசிவாயம், அதிபர்.த.ரவிராஜ், பிரதி அதிபர் சா.விக்கினேஸ்வரன், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.