(ராஜா)
மட்.களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் இம்முறை (2014) ஐந்தம் ஆண்டு புலமைப் பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த வகுப்பு ஆசிரியரை தனது விடுவிப்பு இன்றி பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்துள்ளதாக மட்.களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் அதிபர் ரி.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.
இப்பாடசாலை பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரிட்சையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து வருகின்றது. இந்நிலையில் இவ்வகுப்பாசிரியர் திருமதி.எஸ்.கந்தசாமி அவர்களை 8 வருடங்கள் சேவை முடியுமுன் அதிபரின் முறையான விடுவிப்பின்றி வலயக் கல்விப் பணிப்பாளர் பதில் ஆசிரியர் இன்றி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு (ஆசிரியர்கள் அதிகமாயுள்ள) விடுவித்துள்ளார். என மாகாண கல்விப் பணிப்பாளரின் கடித்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஓர் ஆசிரியர் இடமாற்றம் வருட இறுதியில் நடைபெற வேண்டும் அதுவும் 8 வருட முடிவிலேயே இடமாற்றம் செய்யலாம் அல்லது பதில் ஆசிரியருடன் விடுவிக்கலாம்.
ஆசிரியர் பற்றாக்குறை காணபபடும்போது வருட இடையில் இடமாற்றம் செய்வது. அதுவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை தயார் செய்யும் ஆசிரியரை இடமாற்றம் செய்வது கல்விக்குறிக்கோழுக்கு இழுக்கு, இடையூறு ஏற்படுத்தும் செயலாகும். மேலும் மாணவர்களை நட்டாற்றில் விடும் செயலாகும்.
ஆசிரியர் மாணவர்களுக்காகத்தான் நியமிக்கப் படுகின்றார்கள் என்ற நியதியை மாற்றியுள்ளார் இவ்வலயக் கல்விப் பணிப்பாளர். இது இப்பாடசாலையை தரம் குறைப்பதற்கு எடுக்கப்படும் ஓர் தட்டமிட்ட சதியாகும். என கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாசிரியருக்குப் பொருத்தான ஓர் பதில் ஆசிரியர் நியமிக்கப் படாவிட்டால் இதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், மேலும் மாணவர் அடைவு மட்டக் குறைவு. குறைந்த மட்ட பரீட்சைப் பெறுபேறு என்பவற்றிற்கு வலயக் கல்விப் பணிப்பாளரும், மாகாணக் கல்விப் பணிப்பாளருமே, பொறுப்பாளியாவார்கள்.
இப்பாடசாலையிலிருந்து 3 ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், இடமாற்றப் பட்டுள்ளனர் ஆனால் அதுவரை ஒரு அசிரியர் மட்டுமே பதிலீடாக நியமிக்கப் பட்டுள்ளார்.
அடுத்து இதேபோல் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடமாற்றப்பட்ட சங்கீத ஆசிரியருக்குப் பதிலாக எவ்வித ஆசிரியரும் நியமிக்கப் படாததால் இதவரை அம்மாணவர்கள் அனாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். எவ்விதத்திலும் சங்கீத ஆசிரியர் ஒருவர் தற்காலிகமேனும் நியமிக்கப் படவில்லை என்பதனையும்,இங்கு சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.
என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளன.