அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒக்காஸ் லெப்பை முஹம்மது றிஸ்வான் சமாதான நீதவானாக நியமனம்

(எம்.பைஷல் இஸ்மாயில் )

அட்டாளைச்சேனை 02 ஆம் பிரிவு பிரதான வீதியில் வசிக்கும் ஒக்காஸ் லெப்பை முஹம்மது றிஸ்வான் கல்முனை நீதிமன்ற வலயத்துக்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமானம் செய்துள்ளார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரியும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்தவராவர்.

அட்டாளைச்சேனை அக்-அல் அர்ஹம் வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு தற்போது கற்பித்து வருவதுடன் அண்மையில் வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களின் சிறந்த அடைவினை பெற காரணமாக இருந்தவருர் என்பதும் குறிப்பிடத்தக்கது.