வவுணதீவுப் பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான இளைஞர் சக்தியை வலுப்படுத்தல் பயிறிசி

.



(மா.சசி)
மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான இளைஞர் சக்தியை வலுப்படுத்தல் பயிற்சி திங்கள் கிழமை இடம்பெற்றது.

சுவிடன் கூட்டுறவு நிறுவனத்தின் அனுசரணையுடன் காவிய நிறுவனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து இப் பயிற்சியினை வழங்கியது.

திங்கள் கிழமை (12ஆம் திகதி) காலை முதல் மாலை வரை வவுணதீவு துர்க்கா மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் காவிய நிறவனத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எ.டல்சன் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ பொது முகாமையாளர் பி.கிருபைராசா மற்றும் மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.