கராத்தே விளையாட்டின் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று 25ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதியின் விஷேட ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் இப் பயிற்சியினை பார்வையிட்டு பயிற்றுவிப்பாளர்கள், பயிற்சிபெறுவோர்களிடம் கலந்துரையாடி கலையுடன் சேர்ந்த இவ் விளையாட்டினை பயிலவேன்டுமென உற்சாகப்படுத்தினர்.
இதன்போது பயிற்சிப் பட்டறையில் சமார் 50பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பில் இருந்து வருகைதந்திருந்த பிரபல சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் ஒருவரினால் இவர்களுக்கு விஷேட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.












