"யூனியன் அஷ்யூரன்ஸ்" எற்பாட்டில் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினரின் தலைமைத்துவப் பயிற்சி முகாம்

தலைமைத்துவம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளல் எனும் பயிற்சிப்பட்டறை  "யூனியன் அஷ்யூரன்ஸ்" கிழக்கு பிராந்தியத்தினால் நேற்றய தினம்8ம் திகதி  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந் நிகழ்வு "யூனியன் அஷ்யூரன்ஸ்" கிழக்கு பிராந்திய வலய முகாமையாளர் ம.ஜெகவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இப் பயிற்சிப் பட்டறை நேற்று காலை 9.00 மணிக்கு கருத்தரங்குடன் அரம்பமாகி இரவு முழுவதும் செயல்முறையாக மட்டக்களப்பு மட்டிக்கழி (வௌிச்சவிடு) பகுதியில் இடம்பெற்றது.

இதில் தலைமைத்துவப் பயிற்சி செயல்முறைத் திட்டத்தினை சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினரின் உதவி மாவட்ட ஆணையாளர்களான சார்ள்ஸ், டினேஸ், ஸ்ரீபன், ஸ்டான்லி ஆகியோர் வழங்கிவைத்தனர்.

இதன்போது உயர் தொழில் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன், மட்டக்களப்பு மோட்டார் வாகன பரிசோதகர் மற்றும் "ஒக்ஸ்போர்ட்" கல்லுரியின் நிருவாகப்பணிப்பாளர் ம.நீலவண்ணன் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இப் பயிற்சிப் பட்டறையில், "யூனியன் அஷ்யூரன்ஸ்" இன் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரதீப் வசந்த், திருகோணமலை பிராந்திய முகாமையாளர் விக்னேஸ்வரன், கல்முனை பிராந்திய முகாமையாளர் யூலியன் சசிகுமார் மற்றும் கிழக்கு பிராந்திய வலய  பயிற்சி முகாமையாளர் முகுந்தன் உட்பட திருகோணமலை,மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றனர்.

இப் பயிற்சிப்பட்டறை இவர்களின் தொழில் விருத்திக்கு மிக உகந்ததாக அமைந்திருந்ததாக கலந்துகொண்டோரால் தெரிவிக்கப்பட்டது.