(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த சிந்தனை திட்டத்தின்கீழ் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தொழிநுட்ப பாடபிரிவு அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கான விஜயத்தின்போது சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியலத்திற்கு இன்று (27.05.2014) கல்வி சேவைகள் பிரதியமைச்சர் மொஹான் லால் ஹெய்ரோ மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் அவர்களும் விஜயம்செய்தனர்.
பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களினால் அதிதிகள் வரவேற்க்கப்பட்டனர். இந்நிகழ்வில் கல்வி சேவைகள் பிரதியமைச்சர் செயலாளர் திருமதி மொஹான் லால் ஹெய்ரோ, மீள்குடியேற்ற பிரதி அமைச்சின் இணைப்பு செயலாளர் பொன்.ரவிந்திரன் மற்றும் அமைச்சின் பணிப்பாளர் கந்தலிங்கம் சத்தியவரதன், கல்குடா வலயக்கல்வி அதிதிகள் கோட்டக்கல்வி பணிப்பாளர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது தொழிநுட்ப பாடப்பிரிவுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களிடமும் கலந்துரையாடல் இடம்பெற்றன.
மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட எட்டு உயர்தர மாணவர்களுக்கான தொழிநுட்ப பாடபிரிவு பாடசாலைகளில் கல்குடா வலயத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












