(சித்தாண்டி நித்தி) கொம்மாதுறை கிராமத்துக்கு இன்று (12-05-2014) மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் மற்றும் மாவட்ட செயலாளர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்டோர் விஜயம்செய்தபோது கிராம பொதுமக்களினால் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டதுடன் நீண்டகாலமாக உடைந்து போக்குவரத்து செய்யமுடியாமல் இருந்த வாசிகசாலை வீதியிலுள்ள பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டார்கள். வெள்ளகாலங்களில் மழைநீர் வடிந்தோடுவதற்குரிய வடிகால், குடிநீர் வசதி மற்றும் வீட்டு வசதி என பல குறைபாடுகளை பொதுமக்கள் அமைச்சரிடம முன்வைத்தனர். மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் உடனடி தீர்வாக பாலம், வடிகால், தீவுக்கான நீர் விநியோகம் என்பன செய்து தருவதாக உறுதியளித்து மாவட்ட செயலாளரின் கவனத்துக்கும் கொண்டுவந்தார்.
இதன்போது பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவிந்திரன், கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் கே.உயகுமார் ஆகியோருடன் கிராம மக்களும் வருகைதந்தனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)










