அமெரிக்க தூதரக பிரதிநிதி மட்டக்களப்பு வருகை

இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்காhன அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரெரேசா ரெலச்சியா, அரசியல் நிபுணர் ஆர்.ஈ.சந்தீப் குரூஸ் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைப்பிரதிதிநிதிகளை நேற்றைய தினம் சந்தித்தனர்.

ஓட்டமாவடியில் உள்ள அல் கில்மா கற்கை நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை இச் சந்திப்பு நடைபெற்றது.

இச் சந்திப்பில் மாவட்டத்திலுள்ள மக்களது பிரச்சினைகள், அவர்களது தேவைகள், சமூக மட்ட அமைப்புகளின் செயற்பாடுகள், மத நிறுவனங்கள் மதம் சார்ந்த பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், சமூகத்தில் தேவையாக உள்ள ஊடக இடைவெளி குறித்தும் தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் குறித்தும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ், செயலாளர் எஸ்.எம்.இஸ்ஸடீன், உப தலைவர் திருமதி எஸ்.ருத்ராதேவி, ஊடக இணைப்பாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.