புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மஹா கும்பாவிஷேகம் - எண்ணெய்க்காப்பு

(சதீஸ்)
இலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய புனராவர்த்தன பஞ்சகுண்ட  அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாவிஷேகம் எதிர்வரும் 08.06.2014ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

இக் கும்பாவிஷேக ஆரம்ப கிரியை நிகழ்வுகளாக எதிர்வரும் 02.06.2014ம் திகதி காலை 6.45மணி முதல் இடம்பெறும். தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று இறுதி நாள் 19.06.2014ம் திகதி 1008 சங்காபிசேகம் இடம்பெறும்.

இதில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு 06,07-06-2014 ம் திகதிகளில் (வௌ்ளி,சனி) இரண்டு நாட்கள் இடம்பெறும்.

இந் நிகழ்வுகளிலும் விஷேட பூசைகளிலும் அம்பாளின் அருளைப் பெற்றேகுமாறு பக்தர்களையும், மக்களையும் புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.

ஆலய இவ்வருட உற்சவம் பற்றிய தகவல்களை எமது இணையத்தளத்தில் எதிர்வரும் நாட்களில் வௌியிடுவோம்.