வவுணதீவு சுகாதார வைத்தியர் பிரிவில் புகைத்தல்,மது ஒழிப்பு வார நிகழ்வு

(சதீஸ்)
வவுணதீவு சுகாதார வைத்திய பிரிவின் அலுவலக்த்தில் புகைத்தல், மதுஒழிப்பு வார நிகழ்வினை முன்னிட்டு விழிப்பூட்டல் போதைப்பொருள் பாவனை ஒழிப்பு பற்றிய செயலமர்வு நேற்று 26ம் திகதி இடம்பெற்றது.

வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி வி.கலைச்செல்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் விமலசேகரம்,உளநல சமூக உத்தியோகத்தர் தவேந்திரன், பொது சுகாதார பரிசோதகர் தயாளன், தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்  ஜெயந்தி கலாதேவன் மற்றும் கிராம உத்தியோகத்தர்(நிருவாகம்) ,பொலீஸ் உத்தியோகத்தர்கள்,உளநல உதவியாளர் ரேணுசிறி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது போதைப்பொருள் மற்றும் மதுசாரம் பாவைனையால் ஏற்படும் விளைவுகள் பற்றி கருத்துரைகள் இச் செயலமர்வில் இடம்பெற்றது.

இச் செயலமர்வில் சுமார் 60போருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.