வெசாக் வலையமாக மாறியது மட்டக்களப்பு நகரம் (போட்டோ)

( சிவம் , சதீஸ் )
புத்தபிரானின் பிறப்பு, ஞானம் பெற்றமை மற்றும் இறப்பு என்பவற்றை சித்தரிக்கும் வெசாக் தின பந்தல் வெளிச்சக் கூடுகள் என்பன மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு இன்று புதன் கிழமை (14) மாலை பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோர் தலைமையில் மங்களராமய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் அவர்களும் பொலீஸ் உயர் அதிகாரிகளும், விமானப்படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிசார் மற்றும் முப்படையினராலும் அமைக்கப்பட்டுள்ள இவ் வெளிச்சக் கூடுகளால் திருமலை வீதி, பொலிஸ் சுற்று வட்டம், மங்களராமய பிரதேசம், வெள்ளைப் பாலம் மற்றும் காந்தி பூங்கா பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளதோடு பக்தி கீதங்களும் பாடப்பட்டு நகரம் வெசாக் வலையமாக மாற்றம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு விமானப் படையினரால் மங்களராமய வளாகத்தில் பாரிய வெசாக் பந்தல் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையான நூற்றுக்கணக்கானோர் இவற்றை பார்வையிட்டதோடு சிற்றூண்டிகள், குளிர் பானங்கள் மற்றும் ஐஸ்கிறீம் என்பன தானமாக வழங்கப்பட்டன.