குறிஞ்சாமுனை கன்னன்குடாப் பிரதான வீதியில் உள்ள இப் பாலத்தினால் கன்னன்குடா ,கரையாக்கந்தீவு,மண்டபத்தடி போன்ற கிராமங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதுடன் இப் பகுதியில் உள்ள 4 பாடசாலைகளுக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் செல்ல வேண்டியுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பிலிருந்து கரையாக்கந்தீவிற்கான பேருந்துச் சேவையும் கன்னன்குடா மகாவித்தியாலயம் வரையான பேருந்துச் சேவையும் இடம்பெறுகின்றது.
இப் பாலம் சேதமடைந்து இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளதனால் இப் பேருந்துகளும் அச்சத்துடன் செல்வதுடன் இப் பேருந்துச்சேவையும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தடவை இப் பாலத்தின் மேற் பகுதி சேதமான நிலையில் மேற்பகுதிக்கு கொங்றீட் இட்டு செப்பனிட்ட நிலையிலேயே மீண்டும் சேதமடைந்துள்ளது.












