'இலங்கையிலுள்ள நலிவுற்ற பெண்களை வலுவூட்டும்' நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் சேவ்தசில்ரன் நிறுவனத்தின் அழுலாக்கலுடனும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (YMCA) இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையுடனும் இணைந்து இலவசமாக ஆவணங்களைப் பெறுவதற்கான நடமாடும் சேவை மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தபுரத்தில் வியழக்கிழமை (22) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மயிலம்பாவெளி, சவுக்கடி மற்றும் ஆறுமுகத்தான்குடிருப்பு கிராமசேவை உத்தியோகத்தாகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பதிவாளர்கள், சமாதான நீதிவான்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவா,; செயலாளர், பனைஅபிவிருத்திச் சங்கத்தின் ஆசிரியர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (YMCA) பால்நிலை உத்தியோகத்தர், தொழிற்பயிற்சி உத்தியோகத்தர்கள் வெளிகள உத்தியோகத்தர், சமூகஅணிதிரட்டுனர்கள், உளவள ஆலோசகர்கள் மற்றும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போதுது திருமணப்பதிவுகள், காலம் கடந்த பிறப்பு, இறப்பு, பதிவுகள், தேசிய அடையாள அட்டைகள், காணிதொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல் போன்ற பல இலவச சட்ட ஆலோசனைகள் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு உத்தியோகஸ்தர்களினால் வழங்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் (ymca) பெண்களின் உரிமைகள், பால்நிலை விழிப்புணர்வு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.
இச்செயற்பாட்டில் சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தள்ளதாக மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் (லுஆஊயு) இந்நிகழ்வுக்குப் பொறுப்பான இணைப்பாளர் திருமதி.ஜே.சர்மிளா தெரிவித்தார்.












