மட்டக்களப்பில் அறுபத்து மூன்று நாயன்மார் குரு பூசையும் - ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்

(சதீஸ்)
அறுபத்து மூன்று நாயன்மார் குரு பூசையும் நான்காம் வருட ஆன்மீக எழுச்சி ஊர்வலமும் நேற்று 25ம் திகதி அறுபத்து மூன்று நாயன்மார் அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கூழாவடி, பாலமீன்மடு,கல்லடி, கொக்குவில் போன்ற பல பாகங்களிலிருந்தும்  ஊர்வலங்கள் எழுச்சியுடன்  தாமரைக்கேணி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தினை சென்றடைந்தது.

தொடர்ந்து மகா மாரியம்மன் ஆலயத்தின் முன்றலுல் ஆன்மீக எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,சீ.யோகேஸ்வரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, பிரதேச செயலாளர் வெ.தவராஜா, மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கான பூசையும், கலைநிகழ்வுகளும், ஆன்மீக உரைகளும் இடம்பெற்றது.