மகிழ்ச்சியான குடும்பம், ஆரோக்கியமான சமூகம்

(சுரேஸ்)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மற்றும் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (வை.எம்.சீ.ஏ) நடத்தும், மகிழ்ச்சியான குடும்பம் ஆரோக்கியமான சமூகம்' என்ற தொனிப் பொருளின் கீழ் சிறுவர் துஷ்;பிரயோக தடுப்பதற்கான விழிப்புணர்வு நடமாடும் சேவை கல்லடி புதிய பாலத்தருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மனநலவளத்துறை வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன், வைஎம்.சீ.ஏ. உத்தீயோகத்தர்கள், சிறுவர் கழகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், செயல்திட்டம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டதுடன், சிறுவர் குழுக்களின் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன.
வடக்கு கிழக்கில் வாழ்கின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான அங்கவீனமுற்ற சிறுவர்கள், மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் சமூக பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (வை.எம்.சீ.ஏ) தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும்; எதிர்வரும்  ஜுன் மாதம் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு மண்முனை வடக்குப் பிரிவில் கல்லடிப்பாலத்தருகிலும், நேற்றயதினம் தினம், 20 ஆம் திகதி மண்முனைப் பற்று பிரிவில் தருமபுரத்திலும், 21 ஆம் திகதி போரதீவுப்பற்று பிரிவில் விவேகானந்த புரத்திலும்,  22 ஆம் திகதி மண்முனை தென் எருவில் பற்றில் மகிழூரிலும், 23 ஆம் திகதி மண்முனை மேற்குப் பிரிவில் கொத்தியாபுலையிலும், 26 ஆம் திகதி மண்தென்மேற்குப் பிரவில் பட்டிப்பளையிலும், 27 ஆம் திகதி காத்தான்குடி கடற்கரையிலும், 28 ஆம் திகதி ஏறாவூர் நகரிலும், 29 ஆம் திகதி ஏறாவூர் பற்றின் களுவன்கேணியிலும், 30 ஆம் திகதி கிரான் பிரிவின் திகிலிவட்டையிலும், ஜுன் 2 கோறளைப்பற்று பிரிவின் இந்துக் கல்லூரியிலும்,  3.ஆம் திகதி கோறளைப்பற்று மேற்கிலும்,  4 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி பிரிவில் றிதிதென்னையிலும்,  5 ஆம் திகதி   கோறளைப்பற்று வடக்குப் பிரிவின் வாகரை வடக்கிலும்  இந்நடமாடும் நடாத்தப் படவுள்ளதாக மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (வை.எம்.சீ.ஏ) தெரிவித்துள்ளது