கல்விச் சேவைகள் பிரதியமைச்சர் மொஹான் லால் ஹெய்ரோ மட்டக்களப்பு விஜயம்


(சிவம்)

கல்விச் சேவைகள் பிரதியமைச்சர் மொஹான் லால் ஹெய்ரோ மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு இன்று விஜயம் செய்தார்.

மகிந்தோதய திட்டத்தின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தியின் கல்லூரியில் ரூபாய் 80 இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடத்ததை பார்வையிடுவதற்காக
வருகை தந்தார்.


மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பின் பேரில் கல்விச் சேவைகள் பிரதியமைச்சரின் செயலாளர் திருமதி மொஹான் லால் ஹெய்ரோ, வலயக் கல்வி பிரதிப் பணிப்பாளர் சசீந்திர சிவகுமார், கோட்டக் கல்விப் பணிப்பாளர் சிவகுமார், மீள் குடியெற்றப் பிரதியமைச்சரின் செயலாளர் பொன் ரவீந்திரன் மற்றும் பாடசாலை அதிபர் அருளானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.