கல்குடா வலயமட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுபோட்டியில் சித்தாண்டி வந்தாறுமூலை ம.ம வித்தியாலயம் முதலிடத்தில்

(நித்தி) கல்குடா வலய மட்டத்திலிருந்து மாகாண மட்டத்திற்கு மாணவர்களை தெரிவு செய்யும் விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றன. 

வலயத்திலுள்ள 10 பாடசாலைகள் கலந்துகொண்டதுடன் நடைபெற்ற அனைத்து விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் பாடசாலைகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம் 291 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் இருப்பதுடன் அதிகமான விளையாட்டுக்கள் இம்முறையும் மாகாண மட்டத்திற்கு தெரிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்பாடசாலையுடன் போட்டியிட்ட வாழைச்சேனை இந்து கல்லூரி 149 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் 130 புள்ளிகளைப்பெற்று முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்ணர் வித்தியாலயம் மூன்றாம் இடத்தை பெற்றக்கொண்டன. இதன்போது அதிக புள்ளிகளைப்பெற்று முதல் இடத்திலுள்ள சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.