வௌிநாட்டு தொழில் வீரர்களுக்கு "ரட்டவிருவோ" கடன் வழங்கும் நிகழ்வு

வௌிநாட்டு தொழில் வீரர்களுக்கு "ரட்டவிருவோ"  கடன்  வழங்கும் நிகழ்வு வவுணதீவு பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி மற்றும் கரவெட்டி வாழ்வெழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளில்  அண்மையில் இடம்பெற்றது.

ரூபா.மூன்று இலட்சம் பெறுமதியான கடனை இரண்டு நபர்களுக்கு வீடமைக்கும் நோக்கத்திற்காக வழங்கிவைக்கப்பட்டது.

இதனை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களும் திவிநெகும முகாமையாளர் த.சத்தியசீலன் அவர்களும் வழங்கிவைத்தனர்.

இதன்போது வங்கி முகாமையாளர்களான எம்.மணிவண்ணன், க.தில்லையம்பலம் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொன்றோரும் கலந்துகொண்டனர்.