மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் வேண்டுகோளின்பேரில் சித்தாண்டி கிராமத்துக்கு குழாய் குடிநீர் இணைப்பு

(நித்தி) ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திகுட்பட்ட  சித்தாண்டி கிராமம் நான்கு பிரிவுகளைக்கொண்ட கிராமமாகும். வெள்ள காலங்களில் உறுகாம குளத்து நீர் மட்டம் அதிகரிப்பினால் திறந்துவிடப்படும் நீர், மழைகாலங்களில் அருகிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்துவரும் வெள்ள நீரினாலும் அடிக்கடி தாழ்வடையும் ஒரு பிரதசேமாக கடந்த காலங்களில் இருந்து பதிவாகிவருகின்றது. 

வெள்ள காலங்களில்போது சித்தாண்டி-1,2,3,4 கிராம பிரிவுகளிலுள்ள மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமையினால் சுகாதார பிரச்சினைகளுக்கு கடந்தகாலங்களில் இருந்து முகம்கொடுத்துவருகின்றார்கள். வெள்ள நீர் கிராமத்துக்குள் அடிக்கடி வருவதனால் கிணறுகள் நிரம்பி ஆற்று நீர் கலந்திருப்பதும், மழைகாலங்களில் நிலத்தின் நீர் மட்டம் அதிகரித்து கிணறுகளில் இருக்கும் நீர் ஒருவகை மணம் மற்றும் நிறம் மாறுவதனாலும் சிறுவர்கள் தொடக்கம் அனைவரும் வயிற்றோட்ட நோய்களுக்கு உள்ளாகுவதும் குறிப்பிடத்தக்கது. 

சித்தாண்டி கிராமத்தில் வெள்ளகாலங்களில் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் அவர்களின் வேண்டுகோளின்பேரில் துரிதமாக அனைத்து பகுதிகளுக்கும் குழாய் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சின் திட்டபணிப்பாளர் சத்தியவரதன் தெரிவித்தார்.