சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் - இளவயதினருக்கான உள சமூக உதவி வழங்கல் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு செயலமர்வு

(சதீஸ்)
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் -இளவயதினருக்கான உள சமூக உதவி வழங்கல் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு செயலமர்வு  பிரதேச செயலக மண்டபத்தில் வவுணதீவு பிரதேச உதவு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இன்று 5ம் திகதி இடம்பெற்றது.

இந் நிகழ்வு "வோர் சைல்ட்- கோலாண்ட்"(HOLLAND) நிறுவனத்தின் உதவியுடன் எஸ்க்கோ(ESCO) நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டது.

இதன்போது எஸ்க்கோ(ESCO) நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்பிரித்தியோன், திட்ட இணைப்பாளர் கே.சிவாகரன், திட்ட உதவியாளர்கள் ரி.ததீஸ்வரன்,ஆர்.கிங்ஸ்லி மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மல்ராஜ், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரபாகரன் உட்படகிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ் ESCO  நிறுவனம் இலுப்படிச்சேனை,மண்டபத்தடி, பருத்திச்சேனை, நாவற்காடு, வவுணதீவு,ஆயித்தியமலை தெற்கு அகிய  ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இந் நிறிவனம் கடமையாற்றவுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டது.