கிழக்கு மாகாணசபை தமிழ்மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து இனரீதியாகச் செயற்படுகிறது. இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள 10 கிராமிய அபிவிருத்தித்திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம் கூட தெரிவுசெய்யப்படவில்லை. மட்டு.மாவட்டத்தில் இனவிகிதாசாரம் பேணப்படவில்லை. கடந்தாண்டும் இதே நிலை. எனவே இதற்கு முடிவுகட்டுமுகமாக கிழக்கு மாகாணசபையின் த.தே.கூட்டமைப்பு சகல உறுப்பினர்களையும் திரட்டி பாரிய போராட்டம் நடாத்தவிருக்கிறேன்.
இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் சீற்றத்துடன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபை இவ்வாண்டு தெரிவுசெய்யப்பட்ட 10 கிராமங்களை 50 மில்லியன் ருபா செலவில் அபிவிருத்திசெய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் எ மஜீத் தெரிவித்திருந்தார். கிராமிய அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் 76மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்தாண்டு 20மில்லியன் ருபாவும் இவ்வாண்டு 50 மில்லியன் ருபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட 10கிராமங்களும் தலா 50 லட்சருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இதில் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை றகுமானியா பாத் சம்மாந்துறைமஜீட்புரம் மற்றும் நாகேஸ்பவ எனும் 04 கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்;டுள்ளன.03 முஸ்லிம் கிராமங்களும் ஒரு சிங்கள கிராமமு; தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இத்ததெரிவில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம் கூட தெரிவுசெய்யப்படவில்லை. கடந்தாண்டும் இத்திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம் கூட தெரிவுசெய்யபடவில்லை.
அம்பாறையில் தமிழர்கள் இல்லையா? ஏனிந்த அநீதி? பாராபட்சம்? மஹிந்த அரசுகூட கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் இனமதபேதம் பாராட்டாமல் 10லட்சருபா ஒதுக்கீடுசெய்துள்ளது.
கடந்தாண்டு இப்பாரபட்சம் இடம்பெற்றபோது நான் மட்டக்களப்பு மாநகரமண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்திசபைக் கூட்டத்த்pலும் கிழக்கு மாகாணசபை அமர்விலும் எனது கடும் ஆட்சேபனையை எதிர்ப்பை பகிரங்கமாகவே எழுத்துமூலம் தெரியப்படுத்தினேன். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை.
ஆனால் இவ்வாண்டும் அதே பச்சைப் பாரபட்சம் அநீதி அரங்கேறியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் சதாம்ஹூசைன் மாதிரிக்கிராமம் வாழைச்சேனை காவத்தைமுனை முனைக்காடு மற்றும் கருங்காலிச்சோலை ஆகிய கிராமங்கள் அபிவிருத்திக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 2தமிழ்க்கிராமங்களும் 2 முஸ்லிம் கிராமங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அதாவது இங்கு தெரிவில் இனவிகிதாசாரம் பேணப்படவில்லை. இனவிகிதாசாரப்படிபார்த்தால் 3தமிழ்க்கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கவேண்டு ம்.
ஆனால் கிழக்கு மாகாணசபை பச்சையாகவே பாராபட்சத்தை இனவாதத்தை கக்கிவருகிறது. மேடையில் மட்டும் இன ஜக்கியத்தை பேசுவாhர்கள். செயற்பாடுகளிலும் நிதிஒதுக்கீடுகளிலும் முஸ்லிம்களை மையமாகவைத்தே இனரீதியாக செயற்பட்டுவருகிறார்கள்.
உண்மையில் யுத்தத்தாலும் சுனாமியாலும் கிழக்கு மாகாணத்தில் அதிகூடுதலாகப் பாதிக்கப்பட்டவை தமிழர் பிரதேசங்களாகும். எனவே அவர்களுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவேண்டும்.
கிழக்குமாகாணசபை என்பது மூவினங்களுக்கும் சொந்தமானது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டையும் உள்ளடக்கியதே.இதனை முதலமைச்சரும ஏனையோரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறே எதிர்வரும் சமச்சீரானபிராந்திய அபிவிருத்தித்திட்டத்தின் நிதியொதுக்கீடும் குறித்தவொரு இனத்திற்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுவிடுமோ என்ற நியாயமான அச்சமும் எழுந்துள்ளது. இனியும் இதனை அனுமதிக்கமுடியாது. சர்வாதிகார ஆட்சிசெய்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
எனவே; இதற்கு முடிவுகட்டுமுகமாக எதிர்வரும் சபை அமர்வில் கிழக்கு மாகாணசபையின் த.தே.கூட்டமைப்பு சகல உறுப்பினர்களையும் ஒன்று திரட்டி பாரிய போராட்டத்தையும் எதிர்ப்பையும் நடாத்தவிருக்கிறேன்.













