ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடமாடும் சேவை.


(ஜதி)
மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக் கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிறைவான இல்லம் வளமான தாயகம் என்ற தொனிப் பொருளிலான கிராமம் கிராமமாக வீடு வீடாக எனும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட நடமாடும் சேவை இடம்பெற்றது.

ஏறாவூர் மட்/அல் அஸ்ஹார் வித்தியாலயத்தில்  ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் முஹமட் ஹனிபா தலைமையில் இடம் பெற்ற இவ் நடமாடும் சேவையில்  ஏறாவூர் 02,02B,03,03A ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குரியவை சேவைகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதீதியாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவுத் கலந்து கொண்டதுடன் ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்,திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுகப்பாதுகாப்புக் கொடுப்பனவுகள், சிசுதிரிய  கொடுப்பனவுகள்,கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தால் சிறுவர்களுக்கான மருத்துவக் கொடுப்பனவுகள்,கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் விசேட தேவையுடையோருக்கான முச்சக்கர வண்டிகள் என்பன வழங்கப்பட்டதுடன்.

இதன் போது பிறப்பு,சேவை, அடையாள அட்டை  .சமூக சேவைகள், சமூர்த்தி. திவிநெகும, வியாபாரம். தொழில். பொது வசதிகள். கல்வி, சிறுவர் மகளீர் விவகாரம். சுகாதாரம். காணி .பொலிஸ் திணைக்களம் என 8 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டது.