பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியத்தினால் அதன் தலைவர் த.மேகராசா அவர்களின் தலைமையில் இக்கவிதை நூல் வெளியீட்டு வைக்கப் பட்டது.
இந்நிகழ்வில் கொக்கட்டிச்சோலை திரு தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்கக் குருக்கள், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பொன்னையா-சுவர்ணராஜா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.தயாசீலன், மட்டக்களப்பு கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிழயக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள். அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நூலின் நயவுரையினை கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் திருமதி.றூபி வலன்றீனா பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தினார். அதேவேளை முதற் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் இயக்குனர் நாயகம் வி.றஞ்சிதமூர்த்தி அவர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஆசியுரையினை சிவஸ்ரீ சாம்பசிவம் குருக்கள் அவர்களும், வாழ்த்துக் கவியினை தேசிய கல்விக் கல்லூரி நிறுவகத்தின் சிரேஸ்ட்ட விரிவரையாளர் முருகு தயாநிதி அவர்களும், நன்றியுரையினை பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய ஒன்றியத்தின் செயலாளர் மு.சுதர்ஷினி அவர்களும் நிகழ்த்தினர்.












