மட்டக்களப்பு திமிலைதீவில் கலாசார விளையாட்டு விழா

மட்டக்களப்பு - திமிலைதீவில் கலாசார விளையாட்டு விழா நேற்று திமிலைதீவு நட்சத்திரா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இக் கலாசார விளையாட்டு விழா "யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி" , மட்டக்களப்பு "ஒக்ஸ்போர்ட் கல்லூரி" போன்றவற்றின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதில் ஒட்டப் போட்டிகள், தோணி ஓட்டம், கயிறு இழுத்தல், கண்கட்டி முட்டி உடைத்தல்,வழுக்கு மரம் ஏறுதல் உட்பட பல விளையாட்டுக்களும் இடம்பெற்றது.

இதன்போது இந் நிகழ்வில், விஷேட அதிதிகளாக யூனியன் அஷ்யூரன்ஸ்"இன் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரதீப் வசந்த், யூனியன் அஷ்யூரன்ஸ்" கிழக்கு வலய ஆட்சேர்ப்பு பிரிவு முகாமையாளர் அ.நிரேஷன் மற்றும் ஒக்ஸ்போர்ட் கல்லூரியின் நிருவாகப் பணிப்பாளர் ம.நீலவண்ணன், கிராம உத்தியோகத்தர் தில்லைநாதன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் இன் விற்பனை முகாமையாளர்களான க.நிறாந்தன், கே.ஜெயக்குமார், யூ.மனோபவன்  மற்றும் புதூர் பாடசாலை அதிபர், திமிலைதீவு நட்சத்திரா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.