மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பொதுமக்களின் தேவைகளையும், பிரதேசத்தின் தேவைப்பாடாகவுள்ள அபிவிருத்திகளையும் இனங்கண்டு அண்மைக்காலமாக அவற்றினை வெகுவிரைவாக நிவர்த்தி செய்துவரும் எமது மாநகர சபையானது மக்கள் நலன்கருதி இணையத்தளம் மூலம் வரி செலுத்தும் நடைமுறையினை மிக விரைவில் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக கணனி மூலம் சோலைவரி பற்றுச்சீட்டு வழங்கும் நடைமுறையினை கடந்த 19.05.2014 (திங்கட்கிழமை) மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கும் போது அங்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் சோலை வரி பதிவுகள் மற்றும் அறவீடுகள் அனைத்தும் இலகுவாகவும் மக்களின் நேரத்தை மீதப்படுத்துமுகமாகவும் கணனி மூலம் பற்றுச்சீட்டு வழங்கும் நடைமுறையினை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு இன்று அதை ஆரம்பித்துவைத்ததாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் உட்பட மாநகர உத்தியோகத்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டதுடன், நிகழ்வின்போது முதற் பற்றுச்சீட்டினை ஆணையாளர் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
















