இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இந்திய தூதுவராலயங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.
மலேஷியாவின் புகிட் அமான் பயங்கரவாத தடுப்புக் பிரிவினர் கடந்த புதன்கிழமை (14) கீபொங்கில் வைத்து இவரைக் கைதுசெய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மேலும் மூவர் இந்தியாவின் சென்னையில் கைதாகியுள்ளனர்.
கைதான இலங்கையர் அல்-கைதாவுடன் மறைமுக தொடர்பு கொண்டிருப்பதாகவும், இலங்கை மற்றும் பிற நாடுகளில் தீவிரவாத செயல்களுடன் தொடர்புபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து மலேஷியாவில் பதுங்கியிருப்பதாவும், பொலிஸார் இவரை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கண்கானித்து வந்ததாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
மேலும் இவர் போலி பாஸ்போட் மூலம் மலேஷியாவுக்குள் நுழைந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.