மலேசியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக, மலேசியா காவற்துறை மா அதிபர் காலிட் அபு பாகர்; தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் செலான்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு தேடுதலின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூன்று பேரும் கடந்த 2004ம் ஆண்டு முதல் அங்கு தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மூன்று பேரும் மலேசியாவை தளமாக கொண்டு நிதியை திரட்டியும், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பரப்பியும் அந்த இயக்கத்தை மீளுருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.