அமைச்சருடன் அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். மட்டக்களப்பு விமான நிலையத்தின் அபிவிருத்தி குறித்து அமைச்சர் விமான நிலைய அதிகாரிகளுடனும் விமானப்படை அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார் என்று ஊடகச் செயலாளர் ஜினதாஸ ராஜபக்ஷ அதரிவித்தார்.
ஒரு கோடி ரூபா செலவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு விமான ஓடுபாதை அமைப்பு வேலைகளை அமைச்சர் பார்வையிட்டார்.
45 அடி அகலமும் 1600 அடி நீளமும் கொண்டதாக இந்த விமான ஓடு பாதை அமைக்கப்படவிருக்கின்றது.
விமான நிலையத்தின் முழுமையான அபிவிருத்தி வேலைகளுக்காக 1600 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
விமான நிலைய அபிவிருத்தி சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் றொஷான் தளுவத்த, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஆணையாளரும் பணிப்பாளர் நாயகமுமான எச்.எம்.சி. நிமால்சிறி மற்றும் மட்டக்களப்பு விமான நிலைய தள கட்டளை டீயளந றiபெ உழஅஅயனெநச அதிகாரி எஸ். அமரசிங்ஹ ஆகியோரும் அமைச்சருடான விமான நிலைய அபிவிருத்திப் பணி குறித்த கலந்துரையாடல் பங்குபற்றியிருந்தனர்.












