மாணவியை கடற்கரைக்கு அழைத்துசென்று பாலியல் சேஷ்டை புரிந்த ஆட்டோ சாரதி கைது

தம்பட்டை கடற்கரையில் வைத்து பாடசாலை மாணவியொருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த ஒலுவில் பிரதேசத்தைச்சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் பாதுபாப்பு உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

க.பொ.த சாதாரண தரத்தில் கல்விப்பயிலும் அந்த மாணவி மேலதிக வகுப்புக்கு, அவருடைய முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போதே மாணவியை கடற்கரைக்கு அழைத்துசென்று இந்த குற்றத்தை புரிந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.