கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் இன்று ஞயிற்றுக் கிழமை (01) மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தி, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பட்டிருப்புக் கல்வி வலயத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த 800 மாணவர்கள், 52 போட்டிகளில் பங்குவற்றுவதாக கிழக்கு மாகண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவுக்குப் பெறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவ நித்தியானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இப்போட்டிகளின் பிரதான நிகழ்வு மட். களுதவளை மகாவித்தியாலயத்திலும், ஏனைய நிகழ்வுகள், மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், களுவாஞ்சிகுடி இராசமாணிக்க மண்டபம், மட்.விநாயக வித்தியாலயம், மட்.கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலம், மட்.செட்டிபாளையம் மகாவித்தியாலயம், மற்றும் மட்.தேற்றாத்தீவு மகாவித்தியாலயத்திலும், நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது பிரதி கூத்து, நாடகம், எழுத்தாக்கம், விவாதம், போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறுவதாகவும் இவற்றின் இறுதி முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் எனவும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.