(சிவம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளுள் ஒன்றான இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு க. பொ.த. உயர் தர பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இரத்ததானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே. கருணாகரன் விளக்கமளித்தார்.
சுமார் 135 பழைய மாணவர்களிடமிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் இரத்த மாதிரிகளைச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட வைத்தியக் கலாநிதிகள் மற்றும் தாதியர்களுக்கு பழைய மாணவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டன.