(uk batti)
அறநெறிப் பாடசாலை மாணவர்களின் அறிவை வளர்க்கும் நோக்குடனும் அவர்களை ஊக்குவிக்குமுகமாகவும் இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் ஒவ்வொருவருடமும் நாடளாவியரீதியில் இந்து சமய பொதுஅறிவுப்போட்டிப் பரீட்சையை நடாத்திவருகின்றது. அந்தவகையில் இந்த வருடத்திற்கான பரீட்சை நாளை (28) திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கை முழுவதும் 175 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் (75000) எழுபத்தையாயிரம் மாணவர்கள் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 116 அறநெறிப்பாடசாலைகளைச் சேர்ந்த 14269 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களுக்கான சுட்டிலக்கங்கள் அவர்களது அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் எழில் வாணி பத்மகுமார் தெரிவித்தார்.













