கல்முனை பிரதேச அபிவிருத்தி வங்கியின் 21 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்

(உ.உதயகாந்த்)

பிரதேச அபிவிருத்தி வங்கியின் கல்முனை கிளையின் 21 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் வங்கி வளாகத்தில் முகாமையாளர் என்.எம்.ஸியாத் தலைமையில் இன்று (25) புதன்கிழமை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு மதகுருமாரின் ஆசிர்வாத நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து வங்கியின் 21 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது வங்கி ஊழியர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்வுகளுக்கு அதிதிகளாக ஊவா அபிவிருத்தி வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் டி.எம்.ரி.எஸ்.குமார, உதவிப் பொது முகாமையாளர்களான டி.பி.தர்மதாச மற்றும் டபிள்யூ.வி.ஈ.ஜி.வறகாகொட, அம்பாறை மாவட்ட முகாமையாளர் டி.எம்.குணசிங்க, மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் கல்முனை தமிழ் பிரிவின் பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோரும் வங்கிக்கிளையின் வாடிக்கையாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இவ்வங்கிக்கிளை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் வாடிக்கையாளராக இருந்துவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் அதன் முகாமையாளர் என்.எம்.ஸியாத்திடம் விசேட நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.