மட்டக்களப்பு - அமிர்தகழி சனசமூக நிலையத்தின் 25வது ஆண்டு நிறைவை ஒட்டிகலாசார விளையாட்டுப் போட்டி இன்று அமிர்தகழி சித்திவினாயகர் ஆலய முன்றலில் இட்பெற்றது.
சனசமூக நிலையத்தின் தலைவர் G.பரந்தாமன் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர அணையாளர் மா.உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்துகொண்டார்.
இவ் விளையாட்டு விழாவில் மரதன்ஓட்டம்,கிடுகு பின்னுதல்,கயிறு இழுத்தல், ஓட்டப் போட்டிகள்,தலையணைச்சமர், வினோத உடை, சக்கோட்டம் உட்பட பல விளையாட்டுக்கள் இடம்பெற்றது.
அதிதிகளாலும்,கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்,சனசமூக நிலையத்தின் உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












