இதில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம்
இம் மாதத்துக்கான பௌர்ணமி விழாவினை இன்று(12) வியாழக்கிழமை கல்லடிப்பாலத்தின்
அருகில் மிகச் சிறப்பாக நடாத்தியது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம்
அவர்களின் தலைமையில் ஆரம்பித்த இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர்
ஆர்.ரங்கநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது
முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினரால் பல பாரம்பரிய கலை நிகழ்வுகள்
நிகழ்த்தப்பட்டன. இதனை பிரதேச செயலாளர்கள்,பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.












