புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கு விமானத்திலிருந்து மலர் சொரியும் விஷேட நிகழ்வு

(சதீஸ்)
மட்டக்களப்பு - புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய புனராவர்த்தன பஞ்சகுண்ட  அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாவிஷேகம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக பத்திரகாளி அம்பாளுக்கும் ஏனைய தொய்வங்களுக்கும் ஹெலிகொப்டர் விமானத்திலுருந்து மலர் சொரியும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஆலய பரிபாலன சபையினரின் வேன்டுகோளுக்கிணங்க கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே அவர்களின் சிபார்சுடன் இந்த ஹெலிகொப்டர் விமானத்திலுருந்து மலர் சொரியும் நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம்பெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் அம்பாளின் கும்பாவிஷேக நிகழ்விலும் பூசைகளிலும் கலந்துகொண்டு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அருளைப் பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.